யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார், யாழ்ப்பாணம் மாநகரம் பொம்மை வெளியில் முன்னெடுத்த நவடிக்கையில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் 70 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஐஸ் போதைப்பொருள் வியாபாரி ஐஸ் போதை பொருள் வாங்க வருபவர்களிடம் பணம் இல்லாதவிடத்து அவர்களது கைத் தொலைபேசி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை அடகாக வாங்கிக்கொண்டு ஐஸ் போதை பொருள் விற்பனை செய்து வந்துள்ளார்.
கைது நடவடிக்கை
அதே இடத்தைச் சேர்ந்த 26, 34 மற்றும் 42 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து 07 கையடக்க தொலைபேசிகள் ஒரு FZ ரக மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 2கிராம் 70 மில்லிக்கிராம் ஐஸ் போதையும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் நாளை மன்றில் முற்படுத்தப்படவுள்ளதுடன் சான்றுப் பொருட்களும் ஒப்படைக்கப்படவுள்ளன.
தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுன்னாகம் தெற்கு மற்றும் கோப்பாய் தெற்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவர் 100 போதை மாத்திரைகளுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.