யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் மேற்கு பகுதியைச் சேர்ந்த – போதைக்கு அடிமையான தனது 17 வயது மகனை தாயொருவர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் இன்று காலை ஒப்படைத்துள்ளார்.
குறித்த இளைஞன் க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு தோற்றிய பின் வீட்டில் இருப்பதாகவும் தாயார் கூறியுள்ளார்.
போதை பொருள் பாவனை
கடந்த 2 வருடங்களுக்கு மேலாக போதை பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதன் காரணமாக நேரத்துக்கு ஒழுங்காக சாப்பிடுவதில்லை இரவில் தூக்கமின்மை போன்ற பல இடர்பாடுகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் , தனது மகனின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்த தாயார், தனது மகனை இன்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் தாயாரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட குறித்த இளைஞன், நாளை திமன்றத்தில் பாரப்படுத்தப்பட உள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.