வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை வலுவடைந்து உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தாழமுக்க நிலையானது நாளைய தினம் கடல் பிராந்தியங்களில் மேலும் வலுவடையும் சாத்தியம் உள்ளதாகவும் அத்தினைக்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாழமுக்கமானது எதிர்வரும் 24 ஆம் திகதி சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.



















