வரவிருக்கும் பண்டிகைக் காலம் முடியும் வரை, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 1 கிலோ கோதுமை மாவின் விலையை ரூ. 250.00 ஆக குறைக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டதன் பயனை நுகர்வோருக்கு வழங்குமாறு பேக்கரி உரிமையாளர்களிடம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
1 கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை ரூ.5 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார். அக்டோபர் 28 முதல் டிசம்பர் 31 வரை அமுலுக்கு வரும் வகையில் திறந்த கணக்குகள் மூலம் கோதுமை மாவை இறக்குமதி செய்ய அரசு அனுமதித்ததன் விளைவாக கோதுமை மா குறைப்பு ஏற்பட்டது.
கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்ட போதிலும், பேக்கரி பொருட்களின் விலைகள் குறையவில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.