ஜேர்மன் விமானத்தில் விமானத்தின் முன்பக்கத்தில் அடிபாகத்தில் இருக்கும் பெட்டியை திறக்கும்போது சடலம் கீழே விழுந்துள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் தெஹ்ரான் நகரத்தில் இருந்து ஜேர்மனியின் பிராங்ஃபர்ட் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய Lufthansa-வின் பயணிகள் விமானத்தில் அடையாளம் தெரியாத மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் தரையிறங்கிய பின்னர், பராமரிப்பு பணிகளுக்காக கூடாரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
தரைப்படையினர் சுமார் நான்கு மணிநேரம் அதில் வேலை செய்த பிறகு, விமானத்தின் முன்பக்கத்தில் அடிபாகத்தில் இருக்கும் பெட்டியை திறக்கும்போது சடலம் கீழே விழுந்துள்ளது.
விமானம் ரத்து
சடலத்தின் தோற்றம் குறித்து பொலிசார் உறுதிப்படுத்தவில்லை, மேலும் அந்த நபரின் அடையாளம் குறித்த எந்த விவரங்களையும் அவர்கள் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் அந்த விமானம் மற்றோரு பயணத்திற்கு வெள்ளிக்கிழமை காலை திட்டமிடப்பட்டிருந்த நிலையில், விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் பத்திரிகை நிறுவனம் DPA தெரிவித்துள்ளது.
ஜேர்மனியில் ஈரானிய மக்கள்தொகை அதிகமாக உள்ளது, அவர்களில் ஆயிரக்கணக்கானோர் சனிக்கிழமையன்று பேர்லின் தெருக்களில் ஈரானில் நடந்து வரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஒற்றுமையாக இருந்தனர்.
இதனிடையே, தெஹ்ரானுக்கு எதிரான தண்டனை நடவடிக்கையாக ஈரானிய பிரஜைகள் மீது நுழைவுக் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டத்தையும் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.