கண்டியில் பாடசாலை மாணவர்களை அச்சுறுத்தி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையடித்ததாகக் கூறப்படும் தம்பதியினர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருடி பல இடங்களுக்கு விற்பனை செய்த 12 மொபைல் போன்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மீட்கப்பட்ட திருட்டுப் பொருட்களின் மதிப்பு சுமார் ரூ. 800,000 என கூறப்படுகின்றது.
மேலும் போதைப்பொருள் பாவனைக்காக தம்பதியினர் நாளொன்றுக்கு சுமார் 26,000 ரூபாவை செலவிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கண்டி ஏரிக்கரையில் படகு சேவை மையம் உள்ளிட்ட பல இடங்களில் தங்கியிருந்து பணம், கைத்தொலைபேசிகள், கைக்கடிகாரங்கள் மட்டுமின்றி, பாடசாலை, தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களிடம் இருந்து காலணிகளையும் திருடிச் சென்றுள்ளனர்.
தம்பதியினால் கொள்ளையிடப்பட்ட மாணவர்கள் எவரேனும் இருப்பின் கண்டி தலைமையகப் பொலிஸாரின் குற்றப் பிரிவுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
இவ்வாறு குற்றச்செயலில் பட்ட தம்பதியினர் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.