பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வரும் மக்கள் கடந்த சில மாதங்களாக அமைதியாகியுள்ளனர்.
இந்நிலையில் மக்களை வீதிக்கு இறக்கும் வேலையை அரசாங்கம் மீண்டும் செய்தால், நாடு மீண்டும் குழப்பமடைந்து நாடாளுமன்ற அதிகாரத்தை மட்டுமல்ல ஜனாதிபதி பதவியையும் இழக்க நேரிடுமென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.