விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கின்றது.
இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் மூவர் வெளியேறி விட்டனர். தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோவிலே போட்டியாளர்களுக்கு இரண்டு சேனல்களாகப் பிரிந்து கொடுத்து அதனை தொகுத்து வழங்குமாறு பிக்பாஸ் கூறியுள்ளார்.
இதில் ஒரு நிகழ்வாக ராசி பலனும் மற்றொரு நிகழ்வாக விவாதமும் இடம்பெறுகின்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகிஉ நிலையில் இதில் போட்டியாளர்கள் விவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
அதில் சிவின் “இந்த வீட்டை என்டர்டைன்மெண்டாக வைத்திருப்பது அசீம் தான்” என வாதிடுக்கின்றார்.
மேலும் தனலட்சுமி பேசுகையில் “சண்டையை மட்டும் ஒரே ஆளாக பண்ணிட்டு இருப்பது அசீம் தான், நியாயத்தை மட்டுமே கேட்டிட்டு இருப்பது விக்ரமன்” எனக் கூறியிருக்கின்றார். இதனைத் தொடர்ந்து பதிலுக்கு அசீமும்,விக்ரமனும் வாதிடுகின்றனர். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ அனல் பறக்கும் வகையில் வெளியாகி இருக்கின்றது.