பண்டாரவளை எல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருந்துவத்தை பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
மின்னல் தாகத்திற்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு குடியிருப்புகளுக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வீடுகளில் உள்ள மின்சாதனப்பொருட்கள் சேதமடைந்துள்ளதோடு வீட்டு மின் இணைப்புக்களும், வீட்டு உடமைகளும் சேதமடைந்துள்ளன அத்தோடு வீட்டின் சுவர்களும் முற்றாகச் சேதமடைந்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு எல்ல பொலிஸார், இராணுவத்தினர், பிரதேச செயலக அதிகாரிகள், மாவட்டச் செயலக அதிகாரிகள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகள் ஆகியோர் சென்று பார்வையிட்டு சேத விபரங்களை பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.