இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, இரண்டு இந்திய படகுகளும் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று மாலை தலைமன்னாருக்கு வடக்கு கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் மற்றும் படகில் இருந்த பதினைந்து (15) இந்திய மீனவர்கள் தற்போது தலைமன்னாருக்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.