12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலையில் இன்று (6) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக லிட்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, விலை சூத்திரத்தின்படி, 210 – 250 ரூபாவுக்கு இடைப்பட்டதொரு விலையினால் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது கையிருப்பில் போதுமான எரிவாயு உள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எரிவாயு விலை குறைக்கப்படும் என பரப்படும் தகவலை அடுத்து வர்த்தகர்கள் எரிவாயுவை பதிவு செய்வதில் இருந்து விலகியுள்ளதாகவும் இதன் காரணமாகவே சில இடங்களில் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.