வன்புணர்வு வழக்கில் சிக்கிய தனுஷ்க குணதிலக்கவை விடுவிப்பதற்காக இலங்கை அணியின் பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க பெருந்தொகையான பணத்தொகையை செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இத் தகவலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள் சட்டத் தலைவர் சானக சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனுஷ்கவின் பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை பிணை கோர சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பிணைக்கு விண்ணப்பிக்க 2 லட்சம் டொலர்கள் தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பணத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தற்போது ஈடுபட்டுள்ளதாக சானக சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
50000 டொலர் பணத்தைக் கண்டுபிடிப்பதில் தன்னையும் இணைந்து கொள்ளுமாறு கோரப்பட்டதாக சானக சேனாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது என்னால் நினைத்துப் பார்க்க முடியாதது. இத்தனை கோடிகளை வைத்திருக்கும் கிரிக்கெட் நிறுவனம் 2 லட்சம் டொலர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் ஒவ்வொருவரிடமும் பிச்சை எடுக்கிறது. இதற்காக வனிது ஹசரங்க நிறைய பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் கிரிக்கெட் நிறுவனம் ஏன் சில கையிருப்புகளை செலவிட முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.