முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் அவரது புதல்வர் விமுக்தி குமாரதுங்க ஆகியோர், நவ லங்கா சுதந்திரக்கட்சியின் ஊடாக அரசியலில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நவ லங்கா சுதந்திரக்கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் அவரது புதல்வர் விமுக்தி குமாரதுங்க அத்தனகல்ல தொகுதியின் அமைப்பாளராக பொறுப்பேற்க உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் புதல்வரால் பல பிரச்சினையில் சிக்கியுள்ளேன்
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் மேற்படி முடிவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள குமார வெல்கம, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா மற்றும் அவரது புதல்வர் விமுக்தி குமாரதுங்க ஆகியோர் காரணமாக தான் பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளதாக கூறியுள்ளார்.
நவ லங்கா சுதந்திரக்கட்சி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்பதுடன் அந்த கட்சிக்கு முன்னாள் ஜனாதிபதி ஆதரவு வழங்கி செயற்பட்டு வந்தார்.