இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ஜனநாயக திருவிழாவில் ஆர்வத்துடன் பங்கேற்று மக்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும். இமாச்சல பிரதேச வாக்காளர்கள் ஓட்டுப்பதிவில் புதிய சாதனை படைக்க வேண்டும்.
முதல் முறையாக ஓட்டு போட்டுள்ள இளம் வாக்காளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- பழைய ஓய்வூதிய திட்டத்துக்காக இமாச்சல பிரதேச மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். வேலை வாய்ப்புக்கான வாக்களிப்பாகவும் இருக்கும். மக்கள் அதிகளவில் வந்து தங்களது மதிப்பு மிக்க வாக்குகளை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.