வடக்கு பாகத்தின் பலன்கள் பெண்கள் மற்றும் செல்வத்திற்கு உரியது. வடக்கு பாகம் பொதுவாக பள்ளமாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் அந்த வீட்டு பெண்கள் இன்பமாக இருப்பார்கள் மேலும் செல்வம் பெருகும். வடக்கில் காலியிடம் இருக்க வேண்டும். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் ஈசான்யம் வழியாக வெளியேறினால் அந்த வீட்டில் செல்வ செழிப்பு உண்டாகும். வடக்கு திசையில் சமையல் அறை அமைக்கக் கூடாது. வீட்டில் உள்ள எல்லா அறைகளிலும் வடக்கு பகுதி தூய்மையாக இருக்க வேண்டும்; குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* வடக்கும் மேற்கும் சேரும் மூலை வாயவியம் எனப்படும். வாயவியம் மூளை நன்றாக இருந்தால் வீட்டின் உரிமையாளர் மிகப் பெரிய செல்வந்தர் ஆவார். அது தவறாக இருந்தால் அவர் ஆண்டியாவர். வாயவியத்தில் கழிப்பறைகள் அமைக்கலாம். வாயவியம் பாகத்தில் கிணறு இருந்தால் வழக்குகளாலும் நோயாலும் துன்பம் வரும். கனமான பொருட்கள் இந்த மூலையில் வைக்க வேண்டும். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் வாயவியம் மூலை வழியாக வெளியில் செல்லக் கூடாது.