ஐபோன் வாங்கும் திட்டம் வைத்திருப்பவர்களுக்கு இது சரியான தருணம். முன்னணி ஆன்லைன் வலைதளமான ப்ளிப்கார்ட் ஐபோன் 13 மினி வாங்குவோருக்கு அசத்தலான சலுகையை அறிவித்து இருக்கிறது. அனைத்து விதமான தள்ளுபடி (எக்சேன்ஜ் சலுகை உள்பட) மற்றும் வங்கி சலுகைகளை சேர்த்து ஐபோன் 13 மினி மாடலை ரூ. 34 ஆயிரத்து 490-க்கு வாங்கிட முடியும்.
128 ஜிபி ஐபோன் 13 மினி மாடல் ரூ. 64 ஆயிரத்து 990 விலையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ப்ளிப்கார்ட் இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 9 ஆயிரத்து 910 தள்ளுபடி வழங்குகிறது. இதன் மூலம் ஐபோன் 13 மினி விலை ரூ. 54 ஆயிரத்து 990 என மாறி விடும். இத்துடன் ஐபோன் 13 மினி மாடலுக்கு வங்கி சலுகைகள் மற்றும் எக்சேன்ஜ் ஆஃபர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
ப்ளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 13 மினி வாங்குவோருக்கு ரூ. 20 ஆயிரத்து 500 வரையிலான எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. இரு சலுகைகளையும் சேர்க்கும் பட்சத்தில் ஐபோன் 13 மினி விலை ரூ. 34 ஆயிரத்து 490 என மாறிவிடும். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 5 சதவீதம் கேஷ்பேக், ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மினி மாடலில் 5.4 இன்ச் OLED 1080×2340 பிக்சல் டிஸ்ப்ளே, செராமிக் ஷீல்டு பாதுகாப்பு, ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த ஏ15 பயோனிக் பிராசஸர், 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரிஸ ஐஒஎஸ் 16, IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், 12MP வைடு ஆங்கில் கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.