கடவுச்சீட்டு மற்றும் விசா கட்டணத்தை அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
அடுத்த வருடத்தில் அமுலாகும் வரையில் கட்டணங்களை 20 வீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாடு பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி நிலையில் புதிய வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




















