அரச நிறுவனங்களின் அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் விடுமுறை (லீவு) விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதற்காக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
முன்னோடி திட்டம்
இந்த திட்டம் தொடர்பான முன்னோடி திட்டம் உள்நாட்டு அமைச்சில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆரம்ப செயற்றிட்டம் வெற்றியடையும் பட்சத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள அரச அலுவலகங்களுக்கு இது தொடர்பான முறை அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.