களுத்துறை புளத்சிங்கள பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பௌத்த பிக்கு ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்
புளத்சிங்கள பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் பிக்கு, புளத்சிங்கள- பரகொட வீதியில் நேற்று முன்தினம் 40 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பௌத்த பிக்கு ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துச் செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பிக்கு மத்துகமை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூகத்தின் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பரவியுள்ள போதைப் பொருள்
இலங்கையில் ஹெரோயின், ஐஸ், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் சமூகத்தில் அனைத்து தரப்பினரிடமும் பரவியுள்ளதாகவும் இது மிகப் பெரிய சமூக அழிவை ஏற்படுத்தும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த போதைப் பொருள் பாவனையில் இருந்து இளம் சமூகத்தை பாதுகாக்க அதிகாரிகள் உரிய கவனத்தை செலுத்தி செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்




















