யாழ்ப்பாணம் நெல்லியடியில் போதைப்பொருளுடன் வடமராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் மோப்பநாய் உதவியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
மோப்பநாயுடன் நடத்திய தேடுதல்
கரணவாய், தும்பளை,குடவத்தை பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயதுக்குட்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவும் 83 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மோப்பநாயுடன் நடத்திய தேடுதலின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.