வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் என்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்தோடு ஊவா மாகாணத்தில் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனை அரச வைத்திய அதிகார சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் உதவிச் செயலாளரும் பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியுமான பாலித ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
சிறார்கள் மத்தியில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலைமையால் சிறுவர்களுக்கு காய்ச்சலினால் வலிப்பு ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



















