வவுனியா மாவட்ட செயலகத்துக்கு இன்று (19.11.2022) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் அங்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் காரணமாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும், பொலிஸாருக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதற்கமைய அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் இணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு போன்ற பல நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், வெடிகுண்டு தகர்ப்பு பாதுகாப்பு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்டோர் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர்.



















