அறுவை சிகிச்சைக்காக இந்தியாவில் அனுமதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இந்தியாவில் சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக தற்போது சிங்கப்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றது.
இருப்பினும் இது தொடர்பில் எந்த ஒரு தரப்பிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இதற்கிடையில் பந்துல குணவர்தனவினால் நடத்தப்பட்ட வெகுஜன ஊடகத்துறை அமைச்சராக சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.



















