பூக்களை சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு. பூக்களை தலையில் வைத்து கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தருகின்றது.
பூக்கள் நறுமணமுடையவை.
மூலிகை மருத்துவத்தில் பூக்கள் பயன்படுகிறது. இதனால் எம் மூதாதையர்கள் இந்த பழக்கள்களை ஏற்படுத்தியுள்ளனர்.
எந்த பூக்கள் என்ன மாதிரியான மருத்துவ குணங்களை கொண்டது என்று பார்க்கலாம்.
ரோஜாப்பூ
தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
மல்லிகைப்பூ
மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
செண்பகப்பூ
வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
பாதிரிப்பூ
காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
செம்பருத்திப் பூ
தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
மகிழம்பூ
தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
வில்வப்பூ
சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்.
சித்தகத்திப்பூ
தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
தாழம்பூ
நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.
தாமரைப்பூ
தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும்.