மலேசியாவின் 10 ஆவது பிரதமராக எதிர் கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் இன்று (24.11.2022) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா அஹமத் ஷாவின் விருப்பத்திற்கு அமையவே பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இன்று (24.11.2022) மலேசிய நேரப்படி மாலை 5 மணியளவில் பதவியேற்பு நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமராக பதவியேற்பு
அரண்மனையின் இந்த அறிவிப்பின் மூலம் கடந்த சில நாள்களாக மலேசியாவில் நீடித்து வந்த அரசியல் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் 15ஆவது பொதுத்தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது