இந்தியாவில் திருமண வரவேற்பு விழாவில் மயங்கி கீழே விழுந்த 23 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹவாஞ்சே பகுதியில் 23 வயதான ஜோஸ்னா லூயிஸ் என்ற பெண் தனது உறவினர் வீட்டிற்கு பங்கேற்க சென்றுள்ளார்.\
இதன்போது அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த ஜோஸ்னா லூயிஸ் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்சியடைந்த உறவினர்கள் ஜோஸ்னாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜோஸ்னாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமண வரவேற்பு விழாவில் மயங்கி கீழே விழுந்த 23 வயது இளம்பெண் உயிரிழந்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.