இலங்கை ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் புதியரக ஏலக்காய் வகைகளைக் கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதுவரை வறண்ட பகுதிகளில் மலை உச்சியில் ஏலக்காய் பயிரிடப்பட்டு வந்த நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரகத்தின் சிறப்பு என்னவெனில், தாழ்நில ஈரமான பகுதிகளிலும் இதை பயிரிடலாம் 2எனவும் கூறப்படுகின்றது.
அதன்படி கண்டி, மாத்தளை, குருநாகல், கேகாலை, இரத்தினபுரி காலி, மாத்தறை மற்றும் கம்பஹா போன்ற மாவட்டங்களில் புதிய வகை ஏலக்காயை பயிரிட்டு அதிக வருவாயை பெற முடியும் என ஏற்றுமதி விவசாய மேலதிக பணிப்பாளர் நாயகம் சரத்சந்திர தர்மபராக்கிரம தெரிவித்துள்ளார்.