இன்றைய கால கட்டத்தில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. அனைவரும் தங்களது உடல் கட்டுக்கோப்பாகவும், ஸ்லிம்மாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
பருமனான உடல் வாகை யாரும் விரும்புவதில்லை. ஏனெனில், உடல் பருமன் பல வித உடல் உபாதைகளுக்கு வழிவகுக்கிறது.
இருப்பினும், உடல் பருமனை குறைக்க பல வித பழக்க வழக்கங்களை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, ஜிம்மிற்கு செல்வது, உடற்பயிற்சியை தவறாமல் செய்வது ஆகியவற்றை அனைவராலும் செய்ய முடிவதில்லை.
கடுமையான உடற்பயிற்சிகளை செய்யாமலும், ஜிம்மிற்கு செல்லாமலும் கூட உடல் எடையை குறைக்க முடியும்.
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், தினமும் இரவில் சில ஆரோக்கியமான பானங்களை குடிக்கத் தொடங்குங்கள். இவற்றில் உள்ள மருத்துவ குணங்கள் கொழுப்பை குறைக்க உதவுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்.
பீட்ரூட் மற்றும் எலுமிச்சை : எலுமிச்சை எடையைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது. பீட்ரூட் இரத்தத்தை அதிகரிக்க உதவுகிறது. பீட்ரூட் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது எடையை குறைக்க உதவுகிறது. இந்த பானம் உடலில் உள்ள நச்சை நீக்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
மஞ்சள் பால் : பால் குடிக்கும் பழக்கம் இருந்தால், மஞ்சள் பால் குடிக்கலாம். இது உடல் எடையை குறைக்க உதவும். மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கூடுதல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மஞ்சள் பால் குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இஞ்சி தேநீர் : இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் எடையைக் குறைக்க உதவும். இஞ்சி டீ குடிப்பதால் பசியும் கட்டுக்குள் இருக்கும். இது வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. பால் சேர்க்காமல் இஞ்சி டீ குடித்தால் உடல் எடை குறையும்.
இலவங்கப்பட்டை தேநீர் : இலவங்கப்பட்டை எடையைக் குறைக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையில் சிறிது தேன் கலந்து தேநீர் தயாரித்து தினமும் இரவில் குடித்து வர, சில நாட்களில் வித்தியாசம் தெரியும்.
வெந்தய நீர் : எடை இழப்புக்கு வெந்தய விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரவில் வெந்தய நீர் அருந்துவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. வெந்தய நீர் செரிமானத்திற்கும் நன்மை பயக்கும். அவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றன மற்றும் எடையைக் குறைக்க உதவுகின்றன.