தீயின் காரணமாக 18 பொலிஸாரின் சீருடை எரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இச் சம்பவம் பல்லேகல பொலிஸ் பயிற்சி கல்லுரியின் கட்டடத்தில் இடம் பெற்றுள்ளது.
50 அடி உயரமான கட்டடமே தீபரவலுக்கு உள்ளாகிய நிலையில் தீயால் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார கசிவே தீ ஏற்பட்டமைக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள பல்லேகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.