யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி நிலையம் ஒன்றில் ஆசிரியரால் 3 வயதுச் சிறுவன் தாக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை (24-11-2022) இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆசிரியர் சிறுவர்களுக்கு கோலாட்டம் பழக்கியுள்ளார்.
இதன்போது சிறுவன் தவறிழைத்ததாக தெரிவித்து அவனை கோலாட்ட தடியால் அடித்துள்ளார்.
பின்னர் சிறுவனின் அழுகையை அடக்குவதற்கு முயற்சித்துள்ளார். இதனால் முகத்தில் கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோப்பாய் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.