உடல் எடை அதிகரிப்பது தற்போதைய காலகட்டத்தின் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் வந்த பிறகு இந்த உடல் எடை அதிகரிப்பு இன்னுமும் அதிகரித்து வருகிறது.
கொரோனாவிற்கு பின் ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் கலாச்சாரம் அதிகரித்துள்ளது.இத்தகைய சூழ்நிலையில் மக்களின் உடல் செயல்பாடுகள் குறைந்து, இடுப்பு மற்றும் வயிற்றில் கொழுப்பு குவியத் தொடங்கி உள்ளது.
இப்போது மீண்டும் பழைய உடல்நிலைக்கு திரும்புவது கடினமான காரியமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய சூழ்நிலையில் மதிய உணவில் இந்த 3 பொருட்களை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
3 உணவுகள்
உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி அவசியம், ஏனெனில் இவை கொழுப்பை எரிக்க உதவும், ஆனால் அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவையும் சாப்பிட வேண்டும்.
காய்கறிகளில் பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அவை உடலுக்கு முழுமையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன, மேலும் உடல் சரியாக வேலை செய்ய உதவுகின்றன. குறிப்பாக பச்சைக் காய்கறிகளை சாப்பிட்டால் உடலுக்கு வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் கிடைக்கும்.
பொதுவாக புரதத்தின் தேவை பருப்புகளின் உதவியுடன் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் அதனுடன் உடல் இரும்பு மற்றும் துத்தநாகத்தையும் பெறுகிறது. எடை அதிகரிப்பதைத் தவிர, இவை பல பிரச்சனைகளுக்கு தீர்வாகும்.
மதியம் எப்போது உணவு உண்டாலும் அதன் பின் தயிர் சாப்பிட வேண்டும்.விரும்பினால் மோர் கூட அருந்தலாம், இது வயிற்றில் உள்ள சூட்டைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், செரிமானமும் சிறப்பாக இருக்கும்