பொதுவாக நாம் சில நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தும் மூலிகைப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதன்படி, சீரகம் இதில் முக்கிய இடத்தை பிடிக்கிறது சீரகத்தை அதிக எடுத்துக் கொண்டால் உடலில் பல நோய்கள் உருவாகிறது.
சீரகத்தை ஒரு குறிப்பிட்ட அளவு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சில வீடுகளில் வாசனைக்காக சீரகத்தை எல்லா வகையான சாப்பாடுகளிலும் சேர்ப்பார்கள்.
அந்த வகையில் சீரகத்தை அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை தெளிவாக தெரிந்துக் கொள்வோம்.
உடலில் ஏற்படும் பிரச்சினைகள்
நெஞ்சு எரிச்சல்
சீரக விதைகளை அதிகம் உட்கொள்வதால் நெஞ்சுப்பகுதியில் அதிகப்படியான வாயுக்கள் வெளியேறும்.
இரைப்பையில் அதிகமான வாயுக்கள் நிறைந்திருப்பதால் பசியின்மை ஏற்படும். இது உடல் ஆரோக்கியத்தை குறைக்கும்.
ஏப்பம்
சீரக விதைகளில் அதிகப்படியான கார்மினேட்டிவ் விளைவு காணப்படுகிறது. இதனால் வயிற்றுப்பகுதியில் வீக்கம் ஏற்படும் மற்றும் வாயுக்கள் நிறைந்துக் காணப்படும்.
இதனால் அதிகமாக ஏப்பம் ஏற்படும், இதனால் ஏற்படும் சத்தம் காரணமாக இது பொது இடங்களில் சிலருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும்.
கல்லீரல் பாதிப்பு
சீரக விதைகளை தொடர்ந்து அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் கல்லீரல் மற்றும் சீறுநிரகப்பகுதி பாதிப்படையும் காரணம் இதிலுள்ள சில பதார்த்தங்கள் ஆவியாக்கும் தன்மைக் கொண்டுள்ளது.
கருச்சிதைவு
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு சீரகம் அதிகம் உட்கொண்டால் இது இரத்த போக்கை ஏற்படுத்தும் இதனால் வயிற்றிலிருக்கும் கரு சிதைவடையலாம்.
ஆகவே முடிந்தவரை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
நீரழிவு நோயாளர்களுக்கு ஆபத்து
இது உடலிலிருக்கும் சக்கரையின் அளவில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். இதனால் அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
மேலும் முடியுமான வரை இவர்களும் இதனை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் சக்கரையின் அளவை குறைத்து நீரிழிவு நோயாளர்களை பாதிப்படைச் செய்யும்.
தாய்ப்பால் சுரப்பதில் கடினம்
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சீரகம் சேர்ந்த உணவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்வோமானால் தாய்பால் சுரப்பு குறைவடைவதை கட்டுபடுத்தலாம்.
குழந்தைகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள், இது போன்று தவறுகள் ஏற்படும் பட்சத்தில் வைத்தியரை நாடுவது சிறந்தது.