இலங்கையில் மிருகக்காட்சி சாலைகளில் மிருகங்களுடன் புகைப்படம் எடுக்க கட்டணம் அறவிடும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அத்தாண்டு முதல் புகைப்படம் எடுத்தல் மற்றும் உணவளிக்க தனி டிக்கெட்டை அறிமுகப்படுத்த தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அடுத்தாண்டு முதல் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் மிருகங்களுடன் புகைப்படம் எடுக்க கட்டணம் – அமுலாகும் புதிய நடைமுறை | Sri Lanka Zoo Ticket Price
தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெஹிவளை, பின்னவல மற்றும் ரிதியகம விலங்கியல் பூங்காக்கள் மற்றும் பின்னவல யானைகள் சரணாலயத்தின் அபிவிருத்திக்காக அடுத்த வருடம் 285 மில்லியன் ரூபாவை செலவிட எதிர்பார்க்கிறது.
இந்தத் திட்டங்களுக்குத் தேவையான நிதி ஒருங்கிணைந்த நிதி மற்றும் விலங்கியல் பூங்கா மேம்பாட்டு நிதி மூலம் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.