ஜனநாயகம், மனித உரிமைகளை இன்று எமக்கு கற்றுத்தரும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அன்று சுமார் 70,000 பேரை கொன்று குவித்தவரே என நாடாளுமன்றில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறான ஒருவரால் என்மீது சுமத்தப்படும் போலியான சேறுபூசல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சர் விமலவீர திஸாநாயக்க சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நோக்கி குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.




















