நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பொரளை, கோட்டா வீதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சிறுநீரகக் கடத்தலின் பிரதான முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (5ஆம் திகதி) கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் மட்டக்குளி, கஜிமாவத்தை பகுதியைச் சேர்ந்த பாய் என்ற மொஹமட் பசீர் மொஹமட் ரஜப்தீன் என்ற 41 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுச் சென்றதாகவும், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் 2 ஆம் பிரிவு நிலையத் தளபதி பிரதிப் பொலிஸ் பரிசோதகர் ஆர்.எம். ரத்னமலலாவுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 14, 15 பிரதேசங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் பெண் ஒருவரும் ஒன்றரை இலட்சம் ரூபா, 80 இலட்சம் என வெவ்வேறு விலைகளை தருவதாகக் கூறி சிறுநீரக கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.




















