நாட்டில் தற்போது நிலவும் வானிலை காரணமாக தாழமுக்கம் தாங்க முடியாத மீன்கள் கரைகளில் குவிந்துள்ளன.
மட்டக்களப்பு – பூநொச்சிமுனை கடற்கரையில் பகுதியிலேயே இவ்வாறு மீன்கள் இன்று குவிந்துள்ளன.
காற்றழுத்த தாழ்வு நிலை
கிழக்கு கடற் பிராந்தியத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சுறாவழியாக வலுவடைந்துள்ளளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மன்னாரில் இருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் வரையான கடல் பரப்புகளில் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே பூநொச்சிமுனை கடற்கரையில் தாழமுக்கம் காரணமாக மீன்கள் பெருமளவில் குவிந்துள்ளன.



















