ஜெர்மனியில் வெளிநாட்டினரை சந்தேகப்பட வேண்டாம் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தெற்கு ஜேர்மனியில் பாடசாலைக்கு நடந்த கொலை சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள புலம்பெயர்ந்த நபர் இருப்பதனால் ஒட்டுமொத்த வெளிநாட்டவர்களையும் புலம்பெயர்ந்தோரையும் சந்தேகப்பட வேண்டாம் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திங்கட்கிழமை காலை பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்த சிறுமிகள் மீது நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் 13 வயதுடைய மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இல்லர்கிர்ச்பெர்க் (Illerkirchberg) கிராமத்தில் உள்ள அகதிகள் தங்குமிடத்திலிருந்து வெளியே வந்து மாணவர்களைத் தாக்கியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கத்திக்குத்து இலக்காகிய 14 வயதுச் சிறுதி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அவர் அங்கு உயிரிழந்தார். இச்சிறுதி துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த ஜெர்மன் குடியுரிமை பெற்றவர் என தற்போது தெரியவந்துள்ளது.
சந்தேகத்தின் பெயரில் எரித்திரியாவைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் எனக்கூறிய 27 வயது இளைஞரை ஜேர்மன் காவல்துறையினர் கைது செய்தனர். 13 வயது சிறுமிக்கு கத்தியால் பலத்த காயங்கள் ஏற்பட்டாலும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர் தாக்குதலில் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று அகதிகள் தங்குமிடத்திற்கு சென்றுள்ளார். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கத்தியுடன் அவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்கு ஏற்பட்ட காயம் அவரின் கத்தியால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பின்னர் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சந்தேக நபருக்கு மனநல பிரச்சினைகள் உள்ளதா என்பதையும், தாக்குதலுக்கு முன்னர் இரண்டு சிறுமிகளையும் அவர் அறிந்திருந்தாரா என்பதையும் உறுதி செய்ய வழக்கறிஞர்கள் முயன்றனர்.
வெளிநாட்டினர் அல்லது புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த சம்பவத்தை பயன்படுத்த வேண்டாம் என்று காவல்துறையினர் ஒரு அறிக்கையில் பொதுமக்களை கேட்டுக் கொண்டனர். இது தொடர்பான அனைத்தும் இதுவரை முற்றிலும் தெளிவாக இல்லை என்று காவலதுறைச் செய்தித் தொடர்பாளர்.
வொல்ப்காங் ஜூர்கன்ஸ் (Wolfgang Jürgens) செய்தியாளர்களிடம் கூறினார். இருப்பினும், ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறியதற்காக ஜேர்மனியின் குடியேற்றக் கொள்கையை தீவிர வலதுசாரி AfD உடனடியாகக் குற்றம் சாட்டியது. இல்லர்கிர்ச்பெர்க் என்பது 2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,000க்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட கிராமமாகும்.
துருக்கிய தூதர் அஹ்மத் பாசார் சென் செவ்வாயன்று பேடன்-வூர்ட்டம்பேர்க் மாநிலத்தின் துணைத் தலைவருடன் கிராமத்திற்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேயர் மார்கஸ் ஹவுஸ்லர், அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறினார். அதே நேரத்தில் ஜேர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் பயங்கரமான செய்தி தன்னை உலுக்கியது என்றார்.
கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்த சிறுமி குணமடைவாள் என்று மனப்பூர்வமாக நம்புகிறேன். அனைத்து பின்னணிகளையும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர் என்று அமைச்சர் ட்விட்டரில் எழுதினார்