அநுராதபுரம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரின் மனைவியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று தனது வீட்டுக்கு முன்பாக ரயிலில் மோதப்பட்டு உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (08) பகல் 11.45 மணிளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த யாழ்தேவி ரயிலில் மோதப்பட்டே இவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




















