இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், குருநாகல் மாவட்டத்தில் பின்தங்கிய பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்களின் பாதணிகளை ஆசிரியரொருவர் தைத்து கொடுக்கும் நெகிழ்ச்சியான சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
ஆசிரியரின் மனிதாபிமான செயல்
இது தொடர்பில் குறித்த ஆசிரியர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த பாடசாலை மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ளதுடன், கல்வி பயிலும் மாணவர்களும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள்.சில மாணவர்களின் பாதணிகள் கிழிந்து காணப்படுவதினை நான் தினமும் அவதானிப்பேன்.
இவர்கள் புதிய பாதணிகளை வாங்குவதென்றால் 5000 ரூபா வரை செலவாகும்,தைப்பதற்கு 200 ரூபா வரை செல்லும்.இவர்களால் அந்த தொகையை செலவிடுவது கடினம்.
எனவே என்னால் முடிந்த உதவியினை நான் செய்கின்றேன்.மாணவர்களுக்கு சித்திரப்பாடத்தினை படித்துக்கொடுத்த பின்னர் கிடைக்கும் நேரத்தில் தைத்துக்கொடுப்பேன்.
தைத்து கொடுக்கும் போது மாணவர்களின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை சொல்ல இயலாது. பாதணி தைப்பதில் எனக்கும் ஆர்வம் உண்டு.எனவே என்னால் முடிந்த வரை மாணவர்களுக்கு உதவி செய்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.