கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு இரண்டு அணிகள் தெரிவாகியுள்ளன.
கத்தாரின் அல்-ரய்யான் நகரத்தில் எடியூகேசன் அரங்கில் நேற்றைய தினம்(09.12.2022) கால் இறுதிப் போட்டிகள் இரண்டு நடைபெற்றன.
முதலாவது போட்டி
முதலாவது கால் இறுதிப் போட்டியில் குரோஷியா மற்றும் பிரேஸில் அணிகள் மோதிக்கொண்டன.
இந்த போட்டியில் நிர்ணியிக்கப்பட்ட 90 நிமிட ஆட்ட நேரத்தில் எந்த அணியும் கோல் புகுத்தவில்லை. அதையடுத்து மேலதிக 30 நிமிட ஆட்ட நேரம் வழங்கப்பட்டது.
மேலதிக நேர ஆட்டம் 1:1 விகித்தில் சமநிலையில் முடிவடைந்ததால் இரு அணிகளுக்கும் தலா 5 பெனல்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இதில் குரோஷியா 4:2 விகிதத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இரண்டாவது போட்டி
இதேவேளை இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் ஆர்ஜெண்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்டன.
ஆட்டமுடிவின் போது இரண்டு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமநிலை கோல்களை பெற்றிருந்தன. இந்நிலையில், இரு அணிகளுக்கும் பெனால்ட்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இதன்போது, ஆர்ஜன்டீனா தனது முதல் 4 வாய்ப்புகளையும் கோலாக்கியது. இதேவேளை நெதர்லாந்து 4 வாய்ப்புகளில் 1-ஐ தவறவிட்டது.
இதனடிப்படையில் 4-3 என்ற கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி ஆர்ஜெண்டினா அணி அரை இறுதிக்குள் பிரவேசித்தது.
இதனடிப்படையில் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு தெரிவான முதல் இரு அணிகளாக குரோஷியா மற்றும் ஆர்ஜெண்டினா காணப்படுகின்றன.