சர்வதேச நாணய நிதியம் கடன் வசதிகளுக்கான அனுமதி வழங்கும் வரை, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் நிதியுதவிகளை வழங்கும் ஏனைய நிறுவனங்களிடம் இலங்கை 850 மில்லியன் டொலர் கடனுதவியை எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறு மாதம் என்ற குறுகிய காலத்திற்கு இந்த நிதியை பெற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட தரப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
2022 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 1.87 பில்லியன் கடன்
2022 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் சர்வதேச அபிவிருத்தி பங்காளிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்களுடன் அரசாங்கம் ஏற்கனவே எட்டு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு 1.87 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுக்கொண்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்காக வெளிநாட்டு நிதியை திரட்டுவதை அவசர விடயமாக கருதி இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வதற்காக நிதி வழங்கும் நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.