மொனராகலை வெல்லவாய-எல்ல வீதியில் அம்பவத்த பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென வீதியை கடக்க முயற்சித்த நாய் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து நடக்கும் போது மோட்டார் சைக்கிளில் இரண்டு நபர்கள் பயணம் செய்துள்ளதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்பகல்ல என்ற பிரதேசத்தை சேர்ந்த 41 வயதான இராணுவ சார்ஜன்ட் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்த மற்றைய நபர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.