முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உட்பட்ட விசுவமடு, நாச்சிகுடா பகுதியில் கடந்த 08.12.2022திகதி தொடக்கம் இன்று வரையில் மின்சாரம் இன்றி தாம் பல்வகை பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் கடந்த 8 திகதி காற்றின் காரணமாக மின் வயரில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தன் காரணமாகவே மின் வயரில் பாதிப்பு ஏற்ப்பட்டது.
அன்று தொடக்கம் மின்சார இன்மையால் தமது வர்த்தக நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த குளிரூட்டிகளில் இருந்த பல பெறுமதியான பொருட்கள் அனைத்தும் பழுதடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை
இதேவேளை மின்சாரம் இன்மை காரணமாக கிணற்றிலிருந்து நீரைப் பெற்று நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 18 ஆம் திகதி புலமைப் பரிட்சையில் தோற்றவுள்ள பல மாணவர்களும் தமது கற்றல் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க முடியாமல் மூன்று நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்சார சபையினர் உடனடியாக தமது பகுதியில் மின்சாரத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.