கொள்ளுப்பிட்டி பகுதியில் பம்பலப்பிட்டியிலிருந்து காலி முகத்திடலுக்கு சென்ற காரொன்று முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் மோதியதில், அதன் பின்னால் பயணித்த பெண் ஒருவரை மேலும் இரு பெண்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
பம்பலப்பிட்டி பிரதேசத்தில் முன்னால் சென்ற முச்சக்கரவண்டியுடன் கார் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளதுடன், விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இடம்பெற்ற போது காரின் பின்னால் இருக்கையில் அமர்ந்து சென்ற பெண் ஒருவரை இரு பெண்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
சாரதி தப்பியோட்டம்
இதன்போது தாக்குதலுக்கு உள்ளான பெண்ணின் வாக்குமூலத்தை கொள்ளுப்பிட்டி பொலிஸார் பதிவு செய்துள்ளதுடன், தாக்குதலை மேற்கொண்ட இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் வெள்ளவத்தை மற்றும் எல்லக்கலை பிரதேசத்தில் வசிக்கும் 42 மற்றும் 64 வயதுடைய துப்பரவு பணியினை மேற்கொள்ளும் தனியார் நிறுவனமொன்றின் ஊழியர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இதற்கமைய, சந்தேகநபர்கள் இருவரும் இன்று (டிசம்பர் 12) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
இந்த விபத்துடன், தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான சாரதி தப்பியோடியுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




















