இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீது மற்றுமொரு நடிகையான நோரா ஃபதேஹி 200 கோடி ரூபாய் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில், பெர்னாண்டஸ், தீங்கிழைக்கும் நோக்கத்துடன் தவறான அறிக்கைகளை வெளியிட்டதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, குற்றவாளி சுகேஷ் சந்திரசேகருடன் தொடர்புடைய 200 கோடி ரூபா பணமோசடி வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை நோரா ஃபதேஹி விசாரிக்கப்பட்டார்.
இதன்போது பிங்கி இராணியும் விசாரணை செய்யப்பட்டார். பிங்கி ராணியே, ஜாக்குலின் மற்றும் நோரா ஆகியோருக்கு சுகேஸ் சந்திரசேகரை அறிமுகப்படுத்தியவராவார்.
200 கோடி ரூபாய் அவதூறு வழக்கு
2021 செப்டம்பர் மாதம் 12ம் திகதி நடத்தப்பட்ட ஒரு நிகழ்வின்போது சுகேஸ் சந்திரசேகரின் மனைவியான லீனா பௌலோஸ், நோராவுக்கு ஐபோன் ஒன்றை பரிசளித்துள்ளார் என்பதும் விசாரணையின்போது தெரியவந்தது.
இந்த விசாரணைகளுக்கு மத்தியி;ல் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைகளின்; போது, 16 உயர் ரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கார்கள் லீனா பவுலோஸுக்கு சொந்தமான நிறுவனங்கள் அல்லது மூன்றாம் தரப்பினரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தன.