பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரட்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றை தனக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதன்பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இவ்வாறான சம்பவங்களை எதிர்கொள்ள சந்தர்ப்பம் அளிக்கக்கூடாது என ஜனாதிபதி பாதுகாப்பு துறை தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பிட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கை கிடைக்கப் பெற்றதும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பேராதனை பல்கலைகழகத்தின் முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரது புதல்வர் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் வீட்டை சேதப்படுத்திய மாணவர்களின் நடத்தையை வன்மையாக கண்டிப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க சம்மேளனத்தின் தலைவர் ஷியாம் பண்ணஹெக்க தெரிவித்துள்ளார்.
ஒருபோதும் இவர்களுக்காக குரல் கொடுக்கப் போவதில்லை என்ற உறுதிப்பாட்டை பல்கலைக்கழக மாணவர் சங்கங்களிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாணவர்கள் நியாயத்தையும் சட்டத்தை ஒழுக்கத்தையும் மதிக்கும் பிரஜைகள் என்ற அந்தஸ்த்திற்கு அப்பால் சட்டத்தை கையில் எடுத்து செயற்பட்டுள்ளனர். அதனால் இவர்கள் தொடர்பில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.