டிசம்பரில் நடந்த இரண்டாவது ஏலத்தில் இலங்கையின் சராசரி தேங்காய் விலை 9.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தென்னை அபிவிருத்தி அதிகார சபையினால் நடத்தப்பட்ட ஏலத்தில் 1,000 தேங்காய்களுக்கான சராசரி விலை ஒரு வாரத்திற்கு முன்னர் 69,975.88 ஆக இருந்தது.
இந்த நிலையில் தற்போது 76,438.65ஆக அதிகரித்துள்ளது.
விற்கப்பட்ட தேங்காய்கள்
ஏலத்தில் 722,163 தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டன.
இதேவேள ஜனவரி முதல் அக்டோபர் வரையில் தேங்காய்களின் மொத்த ஏற்றுமதி, முந்தைய ஆண்டை விட 4 சதவீதம் அதிகரித்து 711.4 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டித்தந்தது.