சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்மட்ட நிதியை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக ஜப்பான் உறுதியளித்ததாக நிதி, பொருளாதார மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையை தொடர்பில் ஜப்பானிய பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு நிதி அமைச்சில் இடம்பெற்றுள்ளது. பொருளாதார ஸ்திரப்படுத்தல், தேசிய கொள்கைகள் அமைச்சில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஜப்பானிய தூதரக பிரதிநிதிகள் குழு, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
2.9 பில்லியன் டொலரை கட பெற இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளிடம் மறுசீரமைப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கடுமையான கட்டுப்பாட்டினை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளது.
இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில் முன்னிலையிலுள்ள சீனா அதற்கான இணக்கப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை. இந்தியா கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.