2023 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் 8 பில்லியன் டொலர்களை எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துக்கு அப்பால், பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து அடுத்த ஆண்டு 5 பில்லியன் டொலர் வரை கடனை இலங்கை எதிர்பார்க்கின்றது.
அரச சொத்துக்கள் மறுசீரமைப்பு
அத்துடன் அரச சொத்துக்களை மறுசீரமைப்பதன்(தனியார் மயம்) மூலம் அரசாங்கம் 3 பில்லியன் டொலர்களை திரட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச நிறுவனங்கள் சிலவற்றை, மறுசீரமைப்பதில் ஜனாதிபதி ஆர்வமாக உள்ளார். அதன் மூலம் 2 முதல் 3 பில்லியன் டொலர்களை திரட்ட முடிந்தால், திறைசேரியின் இருப்புக்கள் பலப்படுத்தப்படும் என்று சப்ரி தெரிவித்துள்ளார்.