தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருப்பது நெப்போலியன் வீட்டின் புகைப்படம் தான்.
தென்னிந்திய சினிமா நடிகரானா நெப்போலியன் அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் செட்டிலாகியுள்ளார்.
இந்நிலையில், தற்போது பிரபல Youtuber ஒருவர் அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியலினின் வீட்டிற்கு சென்று அவருடைய வீட்டை சுற்றி பார்த்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோதான் தற்போது சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் நெப்போலியன் பற்றிய மேலதிக தகவல்களை பார்க்கலாம்.
யார் இந்த நெப்போலியன்
துரைசாமி ரெட்டியாருக்கம் சரஸ்வதிக்கும் மகனாக பிறந்தவர் தான் நெப்போலியன். இவரின் உண்மையான பெயர் குமரேசன் துரைசாமி.
திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லுரியில் தான் கற்றுள்ளார். தற்போது அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் செட்டில் ஆகி விட்டார்.
நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் உள்ளனர்.
பூர்வீகம்
திருச்சி மாவட்டத்தில் பெருவளநல்லூர் என்னும் கிராமம் தான் நெப்போலியின் பூர்வீகம்.
இக்கிராமத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் விவசாயிகளாகவும் தொழில் முனைவோராகவும் காணப்பட்டுள்ளனர். இவர் தெலுங்கு ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் தாயை இளந்த நெப்போலியன் தனது சகோதரியின் வளர்ப்பிலே வளர்ந்துள்ளார்.
திரைப்பயணம்
தனது 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
சினிமாவில் ஆர்வம் அதிகமாக எப்படியோ போராடி 1991ல் சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து உள்ளார்.
தொடரும் திரைப்பயணம்
பின் தமிழில் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்திலும் நெப்போலியன் நடித்திருந்தார். மீண்டும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகின்றார்.
நெப்போலியனின் பிரம்மாண்டமான வீடு
தற்போது அமெரிக்காவில் தான் இருக்கும் வீட்டை சுற்றி காண்பித்த வீடியோ ஒன்றை வெளியாகியிருந்த நிலையில் அவ் வீட்டைப்பார்த்து அனைவரும் வாய்ப்பிளந்துள்ளனர்.
நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அழகாக வீட்டைக் கட்டியுள்ளார். 12,000 சதுர அடியில் வீடு கட்டப்பட்டுள்ளது.
மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் இந்த வீட்டில் நீச்சல் குளம், தியேட்டர், கார் செட்டப், பாஸ்கெட் பால், அரங்கம் போன்ற பல வசதிகள் கொண்டு காணப்படுகின்றது.